நடிகர் தவக்களை மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் – 26.2.17

0
194

இயக்குனர் திரு.கே.பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படத்தில் தவக்களை என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து காமெடி நடிகராக பிரபலமானவர் சிட்டிபாபு என்ற தவக்களை(Thavakalai). இவருக்கு வயது 42 இவர் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

Thavakalai
நாடகத்துறையில் இருந்து திரு. கே.பாக்யராஜ் அவர்கள் மூலமாக சினமாவில் அறிமுகமாகி, தனது இயல்பான நடிபினால் ரசிகர்களை கவர்ந்து தனி முத்திரை பதித்தவர். திரு. சிட்டிபாபு என்ற தவக்களை(Thavakalai) அவர் எதிர்பாராதவிதமாக காலமானதை அறிந்து மிகவும் வேதனையடைகிறோம் அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கும், நடிகர் சமூகத்துக்கும் மிகபெரிய இழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்ப்பத்தாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தி பெற பிராத்திக்கிறோம். இவ்வாறு நடிகர் சங்கம் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

Thavakalai

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments