இலங்கை தூதரகத்தை மூடுமாறு கோரிக்கை

0
173

தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை மூட வேண்டும் என்றும் இலங்கை தூதரக அதிகாரிகளை உடனே நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் இந்திய மீனவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர், நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர் உயிரிழந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி ​வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்தச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்திய மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை இலங்கை கடற்படையினர் மறுத்துள்ளனர். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்

Advertisement