#SL vs SA -2 வது டெஸ்டிலும் இலங்கை அணிக்கு மோசமான தோல்வி.

0
72

 

#SL vs SA -2 வது டெஸ்டிலும் இலங்கை அணிக்கு மோசமான தோல்வி.

இலங்கை அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நிறைவுக்கு வந்திருகின்றது.

இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 392 ஓட்டங்களும் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதைத் தொடர்ந்து ஆடிய தென் ஆபிரிக்க அணி 7  விக்கெட்டுக்களை இழந்து 224  ஓட்டங்கள் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்தியது.

507  எனும் இமாலய இலக்குடன் விளையாடிவரும் இலங்கை அணி, நேற்றைய  3  ம் நாள் ஆட்ட நேர நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்கள் பெற்றது.

இன்று போட்டியின் 4  ம் நாள் ஆட்டம் இடம்பெற்ற நிலையில் 224 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களால் தோல்வியடைந்தது இலங்கை அணி.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதலிரு போட்டிகளிலும் வெற்றிபெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றது.

ஆட்ட நாயகனாக ரபாடா தேர்வானார்.