SING சிங் 2016  திரைப்படம் Universal நிறுவனத்தின் Animation படவரிசையில், ‘Despicable Me’, ‘Despicable Me-2’, ‘The Secret Life of Pets’ போன்ற படங்கள் வெகு பிரபலமான வெற்றி படங்கள். இவை தவிர, ‘Minions’ திரைப்படம், Animation பட வரலாற்றிலேயே, வசூலை பொறுத்தமட்டில், 2ஆம் இடத்தை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

அந்த வரிசையில், இந்த ‘Sing’ படமும், வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கண்டு இன்புற தக்கவகையில் உருவாக்கபட்டுள்ளது. நகைச்சுவை மிளிர, நெஞ்சை தொடும் வண்ணம் கதை அமைப்பும் காட்சி அமைப்புகளும் கொண்ட படமிது!

இப்பட கதாபாத்திரங்கள் அனைத்தும் விலங்கினமே!

Buster Moon(Matthew McConaughey, Academy விருது பெற்றவர்) என்கிற கரடி இனம், கலை ஆர்வம் மிக்கது. தனது கலைப் பயணம் தங்கு தடை இன்றி தொடர்ந்து நடை பயில வேண்டும் என்கிற குறிக்கோள் கொண்டது. அதற்காக, மிக பெரிய இசை போட்டிஒன்றை நடத்த முற்படுகிறது.

உலகிலேயே மிகப்பெரிய இசை போட்டியாக இதனை நடத்த முடிவு செய்கிறது! அதில் பங்குபெற 5 விலங்கினங்கள் முன்வருகின்றன.

Mike(Seth Mcfarlane) என்கிற எலி, Meena(Tori Kelly, Grammy விருது பெற்றவர்) என்கிற யானை, Rosita(Reese Witherspoon, Academy விருது பெற்றவர்) என்கிற பன்றி, Johnny (Taron Egerton) என்கிற கோரில்லா மற்றும் Ash (Scarlett Johansson) என்கிற முள்ளம்பன்றி-ஆகியோர் தான் அந்த ஐவர்!

தம் வாழ்வில் வித்தியாசம் கண்டிட, அந்த ஐவரும் முழு ஈடுபாடு கொண்டு பயிற்சியில் பங்கு பெறுகின்றன!

பயிற்சி அளிக்கும் Moon னும் கூட தனது லட்சிய பயணத்தை தொடர்வது தவிர, வேறு சில வாழ்க்கை பாடங்களையும் கற்றுகொள்ள நேரிடுகிறது!

இப்படத்தில் 65 பாடல்கள் உள்ளன என அறியும் போது வியப்படைகிறோம்!

Joby Talbot படத்திற்கு இசை அமைத்துள்ளார். Animation கதாபாத்திர வடிவமைப்பு- Eric Guillon. Gregory Perler படத்தை தொகுத்துள்ளார். Boris JacQ Graphics காட்சியமைப்புகளை மேற்பார்வை செய்துள்ளார். படத்தை எழுதி இயக்கி உள்ளவர், Garth Jennings.

Hansa Pictures நிறுவனம் இப்படத்தை, December 30ஆம் தேதி வெளியிடுகிறது.