நான் நயன்தாராவுடனா? சரவணன்

0
257

நடிகை நயன்தாராவுடன் சினிமாவில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானதை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் மறுத்துள்ளார். தனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். சென்னை பாடியில் சரவணா ஸ்டோர்ஸ் கடை திறக்கப்பட்டதை முன்னிட்டு அதன் உரிமையாளர் சரவணன், நடிகைகள் ஹன்சிகா, தமன்னாவுடன் விளம்பரப் படங்களில் நடித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்திடம் கேட்டபோது சினிமாவில் நடிப்பதாக வந்த செய்திகள் வதந்தியே என்றும் அவருக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தனர்.

Saravana Stores owner denies acting with Nayanthara

Comments

comments