தேர்தலை நடத்த பொலிஸாரின் அதியுச்ச ஒத்துழைப்பு பெறப்படும்

0
27

உள்ளுராட்சி மன்ற தேர்தலை சுமூகமான முறையில் நடத்துவதற்கு பொலிஸாரின் அதியுச்ச ஒத்துழைப்பு பெற்றுக்கொடுக்கப்படும் என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் ஆலோசனையின் பேரில், பொலிஸாரின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றார்.

தேர்தலை இலக்காக கொண்டு சமூக வலைத்தளங்களில் மதவாத மற்றும் இனவாத கருத்துகள் பகிரப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்க எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement