ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் சொத்து விவரங்களை வெளியிட நடவடிக்கை

0
116

தகவலறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் சொத்து விவரங்களைப் பெற்று, அதனை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தயாராகியுள்ளதாக, ட்ரான்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் முகாமையாளர் சங்கீதா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் சொத்து – வருமான விவரங்களைக் கோரியுள்ளதாக, நேற்று நடைபெற்ற செயலமர்வொன்றில், அவர் தெரிவித்தார்.

“சொத்து, வருமானச் சட்டத்தின் கீழ், மக்கள் பிரதிநிதிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்களின் சொத்து – வருமான விவரங்களை வாங்கி விட்டாலும், அந்தச் சட்டத்தின் உப பிரிவுகள் காரணமாக, அவற்றை வெளிப்படுத்துவதற்கு, சட்டத்தில் இடமில்லை. எனினும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக, அவ்வாறான பிரச்சினை இல்லை.

இதற்கமையவே, விவரங்களைப் பெற்று வெளிப்படுத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.

Comments

comments