வேலை நிறுத்தம் தொடர்கிறது! (Postal Strike) ( புகைப்படம் இணைப்பு )

0
24

தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் (Postal Strike) இன்றும் இரண்டாவது நாளாக இடம்பெற்று வருவதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி குறிப்பிட்டுள்ளது.

கடந்த 12ம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை உரிய பதிலளிக்கவில்லை என, குறித்த முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வேலை நிறுத்தத்தால் இலட்சக்கணக்கான தபால்கள் குவிந்து கிடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தாம் ஆரம்பித்துள்ள இந்த 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்திற்கு அதிகாரிகள் உரிய பதிலளிக்கா விடில், விரைவில் தொடர் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும், காரியவசம் கூறியுள்ளார். Postal Strike

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments