LRC பணிப்பாளர் என்னை தாக்க முயற்சித்தார் தடுக்க வந்த பொலிசுக்கு காயம்

0
26

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளரை எனது அலுவலகத்திலிருந்து வெளியேறுமாறு கூறினேன் என்னைத் தாக்குவதற்கு அவர் முயற்சித்தார் அதனைத் தடுத்த பொலிசுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் தாக்கமுற்பட்டமை தொடர்பாக இன்று (12) வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ந.விமலராஜ் தனது மனைவுடன் புதன்கிழமை பிற்பகல் வேளை எனது அலுவலகத்திற்கு வருகைதந்திருந்தார். புதன்கிழமை அலுவலக தினம் மாத்திரமின்றி அவர் அலவலக வாகத்திலே மனைவி சகிதம் வந்திருந்தார்.

தான் துப்பாகிச்சூட்டுக்கு ஆளாகியபோது தனக்கு தானே துப்பாக்கிபிரNhயகம் செய்ய ஏற்பாடு செய்ததாக பாராளுன்ற உறுப்பனிர் கோகேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளதாக முன்னாள் அரசாங்க அதிகர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தன்னிடம் கூறியதாக என்னிடம் கேட்டார் நான் இது தொடர்பாக அரசாங்க அதிகரிடம் விசாரித்தேன் என அவருக்கு பதிலளித்தேன்.

விமல்ராஜ் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்ட போது குற்றவாளியைக்க கண்டுபிடிக்குமாறு கோரி நாங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்தபோது இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகம் உள்ளது அவரே ஏற்பாடு செய்திருக்கலாம் ஏன் பிழையான நடவடிக்கைளுக்கு துணைபோகிறீர்கள் என பல இடங்களிலிருந்து மக்கள் எங்களிடம் கேள்வியெழுப்பினர்.

இதன் உண்மைத் தன்மையை அறியவேண்டி இருந்ததனால் அவரது மேலதிகாரியாக இருந்த அரசாங்க அதிபரிடம் சென்று மக்கள் கூறிய கருத்துக்களின் உண்மைத் தன்மை தொடர்பாக விசாரித்தேன் அவரும் அதில் உண்மை இல்லை என கூறினார். ஆத்துடன் அந்த பிரச்சினையை நான் கைவிட்டேன். இச்சம்பவங்கள் நடைபெற்று பல மாதங்கள் கடந்துள்ளன. மாவட்ட அரசாங்க அதிபர் மாற்றப்பட்டுள்ளார்.

புன்னைக்குடா பகுதியில் அபகரிக்கப்பட்ட காணிகளை காணி சீர்திருத்த ஆணைக்குழு கைப்பற்றியதாகுவம் இதில் அரசியல்வாதிகள் உன்றும் செய்யவில்லை என அரசியல்வாதிகளை மிகவும் மோசமாக விமர்சித்துப் பேசினார் அவருடன் அவரது மனைவியும் அருகில் இருந்தார். அவரும் கடுமையாக பேசினார்.

இதையடுத்து இருவரையும் வெளியேறுமாறு கூறினேன் அதையடுத்து என்னைத் தாக்குவதற்கு எனது கதிரையை நோக்கி வந்தார் எனது அலுவலக பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பரிவினர் அவரைத் தடுத்தார்கள். விமல்ராஜ் அவர்களின் பாதுகாப்பிற்கு வந்த பொலிஸாரும் இணைந்து அவரை வெளியேற்றினர். இதன் போது எனது பாதுகாப்பிற்று இருந்த பொலிஸ் மீது அவர் தாக்கியுள்ளார் இதனால் அவரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நாங்கள் பொலிஸ் நிலையத்துக்கு அறித்து மேலதிக பொலிஸார் வரவளைக்கப்பட்ட பின்னர் விமல்ராஜ் என்னிடம் மன்னிப்பு கோரினார். நான் நடவடிக்கையெடுத்தால் உங்களை பொலிஸ் கைதுசெய்வார்கள் உங்களது வேலைக்கு பாதிப்பு எற்படும் இனிமேல் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட கூடாது என எச்சரித்து மனிதாபிமான அடிப்படையில் நான் அவருக்கு மன்னிப்பு வழங்கினேன்.கடமையிலிருந்த பொலிஸைத் தாக்கியதற்காக வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

ஆனால் பொலிஸார் தன்னைத் தாக்கியதா ஊடகங்களில் விமல்ராஜ் கருத்து வெளியிட்டுள்ளார் இதன் காரணமாக எனது பாதுகாப்பு நிலை மற்றும் அவரது செயற்பாடுகள் கருதி நான் முறைப்பாடு செய்யவுள்ளேன்’ என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments