காணாமல் போனவர்களை மீண்டும் தேடும் நடவடிக்கைகள்

0
59

களுத்துறை – கடுகுருந்த கடற்பகுதியில் படகொன்று கவிழ்ந்ததில் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இன்று காலை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு குறித்த தேடுதல் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், அவசரத் தேவைகளுக்காக அதிகாரிகள் தயாராக இருந்ததாகவும் கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 11 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது காப்பாற்றப்பட்ட 32 பேர் சிகிச்சைகளுக்காக பேருவளை, களுத்துறை மற்றும் நாகொடை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புனித யாத்திரை சென்றிருந்தவர்களே இவ்வாறு அனர்த்தத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.