திருவிழாவுக்கு நாட்டுப் படகுகளில் செல்ல அனுமதி கோரி மனு

0
65

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு மீனவர்கள் நாட்டுப் படகுகளில் செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு, இராமநாதபுரம் ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

இலங்கை வசமுள்ள கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவில், இராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்வது வழக்கம்.

திருவிழாவுக்கான ஒருங்கிணைப்பாளராக, இராமேசுவரம் வேர்கோடு புனித சூசையப்பர் ஆலய பாதிரியார் எல்.சகாயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மீனவர்கள் தங்களது நாட்டுப் படகுகள் மற்றும் விசைப் படகுகளில் சென்று திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம்.

இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாக 100 விசைப் படகுகளுக்கு மட்டுமே எல். சகாயராஜ் அனுமதி வழங்கி வருகிறார்.

மேலும், ஒரு விசைப் படகுக்கு ரூ. 1300 கட்டணமாக நிர்ணயித்துள்ளார். இந்த கட்டணத்தைச் செலுத்தாத படகு உரிமையாளர்களும், மீனவர்களும் திருவிழாவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், ஏழை மீனவர்கள் அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

Advertisement