சொத்து குவிப்பு வழக்கு: ஒரு வாரத்தில் தீர்ப்பு

0
113

சசிகலா வரும் 9ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில், ஜெயலலிதா(Jayalalithaa) மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வார காலத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. முன்னதாக, ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

Jayalalithaa

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கின் இறுதிக் கட்ட வாதங்கள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில்,  தற்போது ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு வார காலத்தில் வெளியிடப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Comments

comments