அதிக நாட்கள் உயிர் வாழ காரணம் ஏன் தெரியுமா?

0
159

வடக்கு பாகிஸ்தானில் (Pakistan) உள்ள கரகோரம் என்னும் மலைப்பிரதேசத்தில் வாழும் குன்ஸா இன (hunza people) மக்கள் தான் உலகிலேயே அதிக நாட்கள் வாழும் மனிதர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், இஸ்லாம் மதத்தை கடைப்பிடிக்கும் இவர்களை கோட்டீஸ் என்றும் அழைக்கிறார்கள்.நவீன உலகத்தில் பெயர் தெரியாத வியாதிகள் வந்து மக்கள் ஆங்காங்கே மரணமடையும் நேரத்தில், இவர்கள் மட்டும் எப்படி இத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறார்கள் என்ற சந்தேகம் வலுத்தது. அதிலும், குறிப்பாக அங்குள்ள மக்களில் இதுவரை ஒருவருக்கு கூட புற்றுநோய் வந்ததில்லை என்ற செய்தியும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்ததில் சில வியக்கத்தக்க முடிவுகள் கிடைத்துள்ளன. அதன்படி, இவர்கள் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பால், முட்டை, வால்நட் போன்ற உலர் பழங்கள் ஆகியவற்றை சமைக்காமல் அப்படியே சாப்பிடுகிறார்கள்.

pakistan

வால்நாட் தான் இவர்களின் பிரதான உணவாக இருக்கிறது. அத்துடன், வால்நட்டில் வைட்டமின் பி 17 அதிகமாக இருப்பதால், அது புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . இவர்கள் மிக குறைவாக சாப்பிட்டு, அதிக தூரம் நடைபயிற்சி செய்கிறார்க்ள. ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிலோ மீட்டர் வரையிலும் மிகச் சாதாரணமாக நடைபயிற்சி செய்கிறார்கள். அத்துடன், வருடத்தில் குறைந்தது 2 – 3 மாதங்களுக்கு எந்த உணவும் இவர்கள் எடுத்துக் கொள்வதில்லையாம். அதற்கு பதிலாக பழச்சாறு மட்டுமே குடித்து பசியை போக்கிக் கொள்வார்களாம்.

மேலும், இந்த இனத்தவர்களின் சராசரி ஆயுட்காலம் 120 ஆக இருப்பதுடன், 70 வயது வரை மிக இளமையாகவே இருப்பார்களாம். அதிலும் குறிப்பாக இங்குள்ள பெண்கள் 70 வயதிலும் சர்வ சாதாரணமாக குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற செய்தி நம்மை ஆச்சர்யத்தில் திகைக்க வைத்தது. இதனிடையே, இந்த இனத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை வெறும் 87 ஆயிரம் மட்டுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  Hunza people

Advertisement