எட்காவை வருட இறுதிக்குள் கைச்சாத்திடுவதே இலக்கு இலங்கையும் அதே நிலைப்பாட்டிலே உள்ளது : இந்தியா

0
28

இலங்கை இந்திய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையான எட்கா உடன்படிக்கையை வருட இறுதிக்குள் கைச்சாத்திடுவதே இருநாட்டு அரசுகளின் எதிர்பார்ப்பாகும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் இந்திய பெருங்கடல் நாடுகள் தொடர்பில் பணியாற்றும் ஒருங்கிணைப்புச் செயலாளர் சஞ்ஜே பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்திய பத்திரிக்கையொன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
இதுவரை இலங்கை இந்தியாவுக்கு இடையில் எட்கா உடன்படிக்கைத் தொடர்பில் நான்குச் சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றுள்ளன. இலங்கைக்கு அதிகளவான நன்மை கிடைக்கும் வகையிலேயே எட்கா உடன்படிக்கை கைச்சச்த்திடப்படவுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திட்டு அதில் பிரதிபலனை எடுக்க வேண்டும். 2000ஆம் ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டிருந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் பல்வேறு நன்னைகள் ஏற்பட்டன. 2015 2016ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மாத்திரம் 6பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான வர்த்தகம் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

எட்காவை வருட

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments