டெங்கு ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்

0
28

இன்று தொடக்கம் அடுத்த மாதம் 5ம் திகதி வரை நாடு தழுவியதாக சுகாதார அமைச்சினால் டெங்கு ஓழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வருடம் 3 மாத காலத்தில் பெண்கள் ,சிறுவர்கள் உட்பட சுமார் 24 ,600 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். டெங்கு என சந்தேகிக்கப்படும் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு கூறுகின்றது.

கொழும்பு , கம்பகா , மட்டக்களப்பு , திருகோணமலை , அம்பாரை மற்றும் யாழ்ப்பாணம் உட்பட 12 மாவட்டங்கள் சுகாதார அமைச்சினால் டெங்கு அபாய மாவட்டங்களாக சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு – கிழக்கு மாணாணங்களில் யாழ்ப்பாணம் , திருகோணமலை , அம்பாரை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலே 5 ஆயிரத்திற்கும் மேல் டெங்கு காய்ச்சல் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.


கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை – 2680 பேர் , மட்டக்களப்பு -960 பேர் , கல்முனை – 827 பேர் , அம்பாரை – 112 பேர் என மாகாணத்தில் 4580 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் கே. முருகானந்தம் தெரிவிக்கின்றார்.

Comments

comments