D.I.G லலித் ஏ ஜெயசிங்க கைது – 25ஆம் திகதிவரை விளக்கமறியலில்

0
32

வடமாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபரும் தற்போதைய மத்திய மாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபருமான லலித் ஏ ஜெயசிங்க நேற்றைய தினம் சனிக்கிழமை குற்ற தடுப்பு புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார்.

D.I.G லலித் ஏ ஜெயசிங்க
கைதுசெய்யப்பட்டவரை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ. சபேசனின் வாசஸ்தலத்தில் அவர் முன்னிலையில் முற்படுத்திய போதே அவரை இம்மாதம் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, பதில் நீதவான் உத்தரவிட்டார்.

புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம் தொடர்பில், சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார், பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றமை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க, கொழும்பு குற்றப்புலனாய்வு துறையினரால் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com