Big Match கிரிக்கெட் போட்டிகளைத் தடை செய்ய வேண்டும்

0
96

“மோதல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றின் தாக்கங்களில் இருந்து, பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற வேண்டுமாயின், பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்படும் ‘பிக் மெச்’ கிரிக்கெட் போட்டிகளைத் தடை செய்ய வேண்டும்” என, ஒமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.

போதைப்பொருள் எதிர்ப்பு வேலைத்திட்டம் தொடர்பில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, “பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகள் காரணமாக, பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.

இதற்கு, கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களை, உதாரணங்களாகக் கொள்ளலாம்.