BCCI நிர்வாகிகளை நீக்கிய சுப்ரீம் கோர்ட். கிரிக்கெட்டுக்கு கிடைத்த வெற்றி என்று பிரபலங்கள் புகழாரம்.

0
60

 

BCCI நிர்வாகிகளை நீக்கிய சுப்ரீம் கோர்ட். கிரிக்கெட்டுக்கு கிடைத்த வெற்றி என்று பிரபலங்கள் புகழாரம்.

BCCI தலைவர் அனுரக் தாகூர் மற்றும் BCCI செயலாளர் அஜய் ஷிர்க் ஆகியோரை பதவியிலிருந்து நீக்கிய உச்சநீதிமன்ற நடவடிக்கையானது  கிரிக்கெட் ஆட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று, சுப்ரீம்கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான, ஆர்.எம்.லோதா குழு  வழங்கிய சீர்திருத்த பரிந்துரையை அமுல்படுத்தாமல், பொய் காரணங்களை கூறி ஏமாற்றி வந்த இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் அனுரக் தாகூரை  உச்சநீதிமன்றம் அதிரடியாக நீக்கியுள்ளது.

இதுகுறித்து ஆர்.எம்.லோதா கூறியதாவது  இந்த நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்க வேண்டியதுதான், இப்போது நடந்துள்ளது. எனது தலைமையிலான குழு , 3 அறிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

அப்படி இருந்த போதும் , BCCI எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. லோதா குழுவின்  அறிக்கையை கடந்த ஆண்டு ஜூலை 18ம் திகதி  சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது.

உடனடியாக BCCI அந்த அறிக்கையை அமுல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாதது பிசிசிஐக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்திவிட்டது.

சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்தால் அதை அனைவரும் ஏற்று நடந்தேயாக வேண்டும். சட்டத்தின் மாட்சிமை தனது பணியை செய்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டுக்கு இந்த தீர்ப்பு ஒரு பெரும் வெற்றி.

நிர்வாகிகள், வருவார்கள்-போவார்கள். ஆனால் விளையாட்டுத் துறைக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதேபோல விளையாட்டு துறை  பிரபலங்கள் பலரும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

Advertisement