மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்திக்கும் பிரபாஸுக்கும் திருமணம் ?

0
693

பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் இந்திய சினிமாவின் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்த படத்தில் நடித்த பிரபாஸுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக பிரபாஸை திருமணம் முடிப்பதற்காக வந்த 6000 பெண்களின் அழைப்பை அவர் நிராகரித்ததாக சமீபத்தில் செய்திகள் எல்லாம் வெளிவந்தன.

இந்நிலையில், மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்திக்கும் பிரபாஸுக்கும் திருமணம் (‘Baahubali’ Prabhas to marry Mumbai  industrialist’s granddaughter ) செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இருப்பினும், பெரும்பாலும் இது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. பிரபாஸின் திருமணம் அடுத்த வருடம் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் ராசி சிமெண்ட் நிறுவனத்தின் சேர்மன் பூபதிராஜுவின் பேத்திக்கு திருமண பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக மும்பை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இவருடைய பேத்தியைத்தான் பிரபாஸுக்கு பேசி முடித்திருக்கிறார்களோ? என்ற ஒரு ஐயமும் எழுந்துள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வேளை அனுஷ்காவும் பிரபாஸும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக  கிசு கிசுக்கப்பட்டதும்  குறிப்பிடத்தக்கது

Comments

comments