மீண்டும் இணையும் ‘அயன்’, ‘மாற்றான்’ கூட்டணி

0
49

Ayan Matran தேசிய விருது ஒளிப்பதிவாளராக இருந்து ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த கே.வி.ஆனந்த் இரண்டாவது படமாக சூர்யாவை வைத்து ‘அயன்’ எடுத்தார். படம் மெகா ஹிட்டானதோடு மட்டுமில்லாமல் சூர்யாவின் திரையுலக வாழ்வில் மைல்கல் படமாக அமைந்தது. அதேசமயம் இதே கூட்டணி மீண்டும் இணைந்த ‘மாற்றான்’ படம் தோல்வியைத் தழுவியது.

இதனிடையில் ‘அனேகன்’ தோல்விப் படத்தையும், ‘கவண்’ வெற்றிப் படத்தையும் கொடுத்த கே.வி.ஆனந்த் மீண்டும் சூர்யாவை இயக்கப்போகிறார். கே.வி.ஆனந்த் சொன்ன கதை சூர்யாவிற்கும் பிடித்துப் போய்விட்டதாம். செல்வராகவன் படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் படத்தில் நடிப்பார் என்று கருதப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement