ATM அட்டைகள் ஊடாக நிதிமோசடி

0
34

ATM -அட்டைகள்-ஊடாக-நிதிமோசடி ஓழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று, தன்னியக்க பணம் பெறும் இயந்திரங்களின் (ATM) ஊடாக நிதிமோசடியில் ஈடுப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோதனை செய்வதாக தெரிவித்து வாடிக்கையாளர்களின் பணம் மீளப்பெறும் அட்டையை சிறிய ரக ஸ்கேனர் இயந்திரத்தில் செலுத்தி அட்டையின் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.

பின்னர் அந்தத் தகவல்களை பயன்படுத்தி போலியான அட்டைகளை தயாரித்து விற்பனை நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

மாத்தளை, மத்துகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, புதுரலிய, கஹவத்தை, தங்கொட்டுவ, மாரவில், நாத்தாண்டியா, பன்னல, கொச்சிக்கடை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேங்களில் இந்த மோசடி இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement