8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

0
44

சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவுவதால் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார இது தொடர்பில் கூறியுள்ளதாவது,
இரத்தினபுரி, காலி, கேகாலை, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அடுத்துவரும் பல மணித்தியாளயங்களில் சீரற்ற காலநிலை நிலவ உள்ளதால் மண்சரிவு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் தென் மேற்குப் பிரதேசங்களில் அடுத்துவரும் சில தினங்களுக்கு தொடர்ந்தும் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments