70,000 பேர் டெங்கு தொற்றுக்கு இலக்கு…

0
14

நாட்டின் பல பிரதேசங்களிலும் 70,000 பேர் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக சுகாதார சேவை உதவியாளர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் 45 வீதமானோர் மேல்மாகாணத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும்,சுமார் 200 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும் இந்த சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.

தற்போது அதிகம் விற்பனை செய்யப்படும் ரம்புட்டான்,மங்குஸ்தான் தோல்களில் நீர் நிரம்புவதாலும் டெங்கு அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வீதியோரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் நுளம்புகள் அதிகரித்துள்ளதாகவும்,மேல்மாகாணத்தில் டெங்கு அதிகரிப்புக்கு இதுவே காரணம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments