காங்கோவில் தொடரூந்து விபத்து – 33 பேர் பலி

0
45

காங்கோவில் தொடரூந்து விபத்து – 33 பேர் பலி

மத்திய ஆபிரிக்க நாடான காங்கோவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற தொடரூந்தொன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகினர்.

காங்கோவின் லுபும்லாஷி நகரில் இருந்து லுயினா நகருக்கு நேற்றைய தினம் எரிபொருளை ஏற்றிய 13 பெட்டிகளில் கொண்ட தொடரூந்தொன்று பயணித்துள்ளது.

இந்த சரக்கு தொடருந்தில் பொதுமக்களும் சட்டவிரோதமாக பயணித்துள்ளனர்.

குறித்த தொடரூந்து மலை சிகரம் ஒன்றின் ஊடாக பயணித்த போது தடம்புரண்டுள்ளது.

இந்த விபத்தில் 33 பலியானதாக அந்தநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தொடரூந்து சரக்கு ஏற்றிச் செல்லும் தொடரூந்து என்பதால் அதில் பயணித்த அனைவரும் சட்டவிரோத பயணம் செய்ததாகவே கருதப்படுவதாக காங்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com