இளைஞர்களுக்கு இது தான் தேவை – இந்தியா அணி கேப்டன்

0
39

இளைஞர்களுக்கு இது தான் தேவை – இந்தியா அணி கேப்டன்

புதுடெல்லி:  இன்றைய இளைஞர்கள் உடல் ரீதியான விளையாட்டுகளில் ஈடுபடுவது மிகவும் அவசியம். என இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, 29. சர்வதேச அளவில் பல விளையாட்டு வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும் முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இதற்கு இவரின் கட்டுக்கோப்பான உடல் அமைப்பும் ஒரு காரணமாகும்.

இவரை போல தானும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இளைஞர்களுக்காக தனது சொந்தமான உடல் கட்டமைப்பு நிறுவனத்தை கோலி துவங்கியுள்ளார். இதை துவங்கி வைத்து பேசிய கோலி, இன்றைய இளைஞர்கள் உடல் ரீதியான விளையாட்டுகளில் ஈடுபடுவது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோலி கூறுகையில், தற்போது பல குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே அமர்ந்து வீடியோ கேம் விளையாடுவதை பார்க்கிறோம். அவர்களுக்கு உடல் ரீதியான விளையாட்டுக்கள் மிகவும் அவசியமானது. இதுவெறும் இளைஞர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் அவசியம். சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் முழுவதுமான நேரத்தை அதிலேயே செலவிடுவது வேஸ்ட். அந்த நேரத்தில் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள செலவிட வேண்டும். என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com