தெலுங்கில் புகழ் பெற்ற ஒல்லி இசை நடிகர்

0
45

மூன்று முதல் விவேகம் வரை இசையாலும் தனது குரல் வளத்தாலும் தமிழில் அதிக ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் மற்றும் பாடகர் அனிருத்.

Anirudh Ravichander

தற்பொழுது தெலுங்கு சினிமாவில் கால்தடம் பதித்துள்ள அனிருத் தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

அனிருத் தற்பொழுது தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தெலுங்கு படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.

Anirudh Ravichander

திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கும் இந்த திரைப்படமானது எதிர்வரும் டிசம்பரில் வெளியாக இருக்கிறது.

இதுவரையில் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் ஒரு பாடல் இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது.

“பைட்டி கொச்சி சூஸ்தே” என்ற அந்த பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கானவர்கள் இந்த பாடலை பார்வையிட்டுள்ளமையினால், பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

Anirudh Ravichander

இசையமைப்பாளர் அனிருத் அடுத்து ஜூனியர் என்.டி.ஆர். படத்துக்கு இசை அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனிருத் நடிகர் தனுஷுடன் ஒரு சில படங்களில் சிறிய காட்சியில் நடித்துள்மை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com