ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாகுபலி

0
171

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாகுபலி

ஏ.ஆர்.ரகுமான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வேறு இசையமைப்பாளர்கள் பாடுவது வழமையான விடயம்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்,யுவன் சங்கர் ராஜா, அனிருத் போன்றோரும் இசைப்புயலின் இசையில் பாடியவர்கள் தான்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பில் சமீபத்தில் பாகுபலி பட இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான்

எம்.எம்.கீரவாணி தமிழ், தெலுங்கில் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளதுடன், தமிழில் மரகதமணி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

இசைபுயலின் இசையில் பாடல் பாடியதாக தனது இணைய தளத்தில் கீரவானி உறுதி செய்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரஹ்மானின் சிறந்த மெல்லிசை பாடல்களில் ஒன்று என கீரவானி கூறியிருந்தாலும், எந்த திரைப்படத்திற்காக இப்பாடல் பதிவானது என்பது பற்றி எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது ‘99 சாங்ஸ்’, சிரஞ்சீவியின் ‘செயரா நரசிம்ம ரெட்டி’ ஆகிய இரண்டு படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com