விஜய்க்கு ஜோடி சேர விரும்பும் பிரியங்கா

0
459

பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா இளையதளபதி விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்க விரும்புவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

vijay-priyankachopra

இயக்குனர் மஜித் இயக்கத்தில் 2002ம் ஆண்டு விஜய், பிரியங்கா சோப்ரா, விவேக், ரேவதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் தமிழன்.

தமிழன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா, இருப்பினும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.

விஜய்க்கு ஜோடி சேர விரும்பும் பிரியங்கா

பாலிவுட்டில் சூப்பர் ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார்.

இளையதளபதி விஜய்யின் மெர்சல் படம் பல்வேறு தடைகளை தாண்டி வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

விஜய்க்கு ஜோடி சேர விரும்பும் பிரியங்கா

இந்நிலையில் பிரியங்கா நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகை எனவும், மீண்டும் அவருடன் நடிக்க விரும்புவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com