நடிப்பு வராததால் ஹீரோயின் மாற்றம்

0
68

தியாகராஜன் தயாரிப்பில், வெற்றிச்செல்வன் இயக்கத்தில், பிரசாந்த், சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்தராஜ் நடிக்கும் திரைப்படம் ஜானி.

Johnny

இந்த திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் கூறியதாவது: “ஜானி ஒரு ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை ஆகும். படம் தொடங்கிய 15வது நிமிடத்தில் இருந்து கிளைமாக்ஸ் தொடங்கி விடும் என்பதுதான் திரைக்கதையின் புதுமை” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிளைமாக்ஸின் அடுத்து என்ன நடக்கும் என்பதைக் கணிக்க முடியாத அளவுக்கு படத்தின் வேகம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Johnny

ஜானி திரைப்படத்தின் நடிகர்கள் பற்றி பேசும் போது தயாரிப்பாளர் கூறுகையில் “முதலில் நடிக்க புதுமுக நடிகையை ஒப்பந்தம் செய்தோம். அவர் உலக அழகிப் போட்டிகளில் பங்கேற்றவர். குறித்த கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்தோம். மூன்று நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஆனால், அவருக்கு நடிப்பே வரவில்லை. நாங்களும் அவருக்கு எவ்வளவோ பயிற்சி அளித்துப் பார்த்தோம். அதற்குப் பிறகும் கூட அவருக்கு நடிப்பு வரவில்லை. எனவே, அவருக்குப் பதிலாக சஞ்சிதா ஷெட்டியை நடிக்க வைத்தோம். என குறிப்பிட்டுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com