அர்ஜூன் அலோஷியஸ் கோரிக்கை நிராகரிப்பு – நீதிமன்றம்

0
15

அர்ஜூன் அலோஷியஸ்சிங்கப்பூர் செல்ல அனுமதியளிக்குமாறு அர்ஜூன் அலோஷியஸ் விடுத்த கோரிக்கை இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்ல அனுமதியளிக்குமாறு அர்ஜூன் அலோஷியஸினால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஆராய்ந்த கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன அர்ஜூன் அலோஷியஸிற்கு வெளிநாடு செல்ல தடைவிதித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் நான்கு பேருக்கு வெளிநாடு செல்ல அண்மையில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ், அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன, பிரதான முகவர் நுவன் சல்காது மற்றும் அந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப நிறைவேற்று அதிகாரி சச்சின் தேவதந்திரி ஆகியோருக்கே இந்த தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement