தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டம்

0
25

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டம்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் விசாரணையின்றி சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகளின்றி விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டமொன்றை நேற்று (24) செவ்வாய்கிழமை ஆரம்பித்துள்ளனர்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கையெழுத்துப் போராட்டம் மாவட்டம் பூராகவும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இப்போராட்டத்தில் பெறப்படும் கையொப்பங்களுடன் தமது கோரிக்கைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள இப்போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டியுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement