50 இலட்சம் ரூபாய் போதைபொருளை கடத்த முற்பட்டவர் கைது

0
29

50 இலட்சம் ரூபாய் போதைபொருளை கடத்த முற்பட்டவர் கைது

50 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த போதைபொருளை கொழும்பு துறைமுகத்திலிருந்து இரகசியமான முறையில் கொண்டு செல்ல முயற்சித்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி தப்பிச்செல்ல முயற்சித்த போது, கொட்டாஞ்சேனை கல்பொத்த சுற்றுவட்டத்தில் சொகுசு வான் ஒன்றில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதுடன், இரு பொலிஸ் அதிகாரிகள் சிறு காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் குறித்த போதைப்பொருட்களை அதிவேக நெடுஞ்சாலையினூடாக கம்பஹாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement