50 அடி பள்ளத்தில் பாய்ந்தது பஸ் : 21 பேர் படுகாயம்

0
64

கதிர்காமத்திலிருந்து, நுவரெலியா வலப்பனை வழியாக மிஹிந்தலை நோக்கிப் பயணித்த தனியார் சுற்றுலா மினி பஸ் ஒன்று வலப்பனை நுவரெலியா பிரதான வீதியில் மாஹாஊவாபத்தன பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

மிஹிந்தலை பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கதிர்காமத்திற்குச் சென்று மீண்டும் மிஹிந்தலைக்குச் செல்லும் வழியிலேயே குறித்த பஸ் நேற்று இரவு 8 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பஸ்ஸில் பயணித்த 21 பேர் படுகாயமடைந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக பஸ் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் விளைவே மேற்படி விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த 21 பேரில் 15 பேர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையிலும், 6 பேர் வலப்பனை வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து தொடர்பில் வலப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Advertisement