5 போட்டிகள் கொண்ட தொடருக்கு இனி வாய்ப்பில்லை

0
171

5 போட்டிகள் கொண்ட தொடருக்கு இனி வாய்ப்பில்லை

5 போட்டிகள்இரு நாடுகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இனிமேல் இடம்பெறாமல் போகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

இதன்படி, 13 அணிகள் பங்குகொள்ளும் ஒருநாள் லீக் போட்டிகளை நடத்த திட்டமிடப்படுகிறது.

இவ்வாறான போட்டிகள் இடம்பெற்றால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையில் ஐந்து போட்டிகளை கொண்ட தொடரை நடத்துவது கடினம் என அஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இந்திய அவுஸ்ரேலிய அணிகள் தற்போது விளையாடும் ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரே இறுதி ஐந்து போட்டிகள் கொண்ட தொடராக அமையலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments