தற்காலிகமாக சிறையிலிருந்து வெளியேறினார் சசிகலா

0
106
தற்காலிகமாக சிறையிலிருந்துதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன் அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமது கணவரை சந்திப்பதற்காக சசிகலாவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அவருக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டது.
இதற்கமைய, அவர் சென்னை சென்றுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடக் கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என நிபந்தனைகள் அடிப்படையில் சசிகலாவுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
Advertisement