இலங்கை , பங்களாதேஸ் அணியும் தடுமாறுகின்றன.

0
83
இலங்கை , பங்களாதேஸ் அணியும் தடுமாறுகின்றன.
இலங்கை
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.
போட்டியில் தமது 2வது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கைஅணி நேற்றை நான்காம் நாள் ஆட்ட நிறைவு வரையில் 4 விக்கட்டுக்களை இழந்து 69 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதனிடையே சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.
போட்டியில் 424 என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்டநிறைவின் போது 3 விக்கட்டுக்களை இழந்து 49 ஓட்டங்களைப்பெற்றிருந்தது.
போட்டியில் தென்னாபிரிக்க அணி தமது முதலாவது இனிங்சில் 496 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்ஸில் 247 ஓட்டங்களையும் பெற்றது.
பங்களாதேஷ் அணி தமது முதலாவது இனிற்சில் 320 ஓட்டங்களைப்  பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Advertisement