அரசாங்கம் மேற்கொண்டு வந்த செயல்பாடுகள் தொடர்பில் – ரணில்

0
12

கடந்த இரண்டு வருடங்களாக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வந்த செயல்பாடுகள் தொடர்பில், மக்களை தெளிவூட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கஹாட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நூல் ஒன்றை அச்சிட்டு விநியோகிக்கவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த 20 வருடங்களாக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தவறான செயல்பாடுகள் தொடர்பிலும் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் விடயங்கள் தொடர்பாகவும் மக்களை தெளிவூட்டும் வகையில் பிறிதொரு நூல் வெளியிடப்படவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், மக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்த விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.