332 ஓட்டங்களுக்குச் சுருண்டது இந்தியா

0
54

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையே தர்மசாலாவில் நடைபெற்றுவரும் மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 332 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 300 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

துடுப்பாட்டதில் அணித் தலைவர் ஸ்மித் 111 ஓட்டங்களை விளாசியிருந்தார். பந்துவீச்சில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்குத் தனது முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 332 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில், ராகுல் 60, ஜடேஜா 63, புஜாரா 46 என்ற அடிப்படையில் ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் நேதன் லையன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஹாசில்வுட் மற்றும் ஓ கீபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தாடிவரும் ஆஸ்திரேலியா மதியபோசன இடைவேளைவரை 3 விக்கெட்டுகளை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments