28ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை!

0
11380

கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைய எதிர்வரும் 28ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கி பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும்,சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தூய்மைப்படுத்தப்படுத்தமாறும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிவசத்துடன் சுகாதார அமைச்சர் தொலைபேசி மூலம் உரையாடி பாடசாலை விடுமுறை தொடர்பில் கலந்துரையாடியதையடுத்தே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments