22 வயது பெண்ணைக் கொலை செய்து அவரது உடலை வெட்டி நாய்களுக்கு இரையாக்கிய பிரேசில் கோல் கீப்பர்

0
113

தனது முன்னாள் காதலியைக் கொன்ற வழக்கில் பிரேசில் கோல் கீப்பர் புருனோ ஃபெர்னாண்டசை மீண்டும் சிறையில் அடைக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

22 வயது பெண்ணைக் கொலை

முன்னாள் காதலி எலிஸா சமுதியோ என்ற 22 வயது பெண்ணைக் கொலை செய்து அவரது உடலை வெட்டி நாய்களுக்கு இரையாக்கியதாக பயங்கரமான குற்றச்சாட்டில் அவருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் 7 ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை அனுபவித்த நிலையில் ஹேபியஸ் கார்ப்பஸ் ரிட் மனு தாக்கல் செய்து சிறையிலிருந்து வெளியே வந்தார், அதாவது தன்னை சட்ட விரோதமாக சிறையில் அடைத்ததாக அவர் செய்த ஹேபியஸ் கார்ப்பஸ் ரிட் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் கால்பந்தாட்டத்திற்குத் திரும்பினார்.

இதற்கு பிரேசிலில் பொதுமக்கள் மற்றும் சில அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, காதலியைக் கொன்று உடலை கூறாக்கி நாய்களுக்கு உணவாக்கிய பயங்கர வன்முறை அவரது கொலையில் இருப்பதால், மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement