2020வரை நல்லாட்சி அரசை எவராலும் அசைக்க முடியாது

0
35

நல்லாட்சி அரசை 2020ஆம் ஆண்டு வரையில் பாதுகாப்போம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிவிருத்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேறகண்டவாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

நல்லாட்சி அரசை விட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகிக் கொண்டாலும், தொடர்ந்தும் தமது கூட்டணி ஆதரவளிக்கும்.

சில தரப்புக்கள் அரசை கவிழ்க்க முயற்சித்த போதிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணி அவ்வாறு செய்யாது. மஹிந்த ராஜபக்ஸ அரசால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் காரணமாக இந்த அரசால் மக்களுக்கு அபிவிருத்தித் திட்ட நலன்களை வழங்குவதில் சிரமங்கள் காணப்படுகிறது.

நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் சட்டம் சமமாக அமுல்படுத்தப்படும். வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மையா என்பது தெரியாது. அவ்வாறு உண்மையென்றால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு.
சில தனியார் ஊடகங்கள் தமக்கு சேறு பூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஊடக சுதந்திரம் ஜனநாயகத்தின் அடையாளம் எனவும், ஊடகத்தை பக்கச்சார்பின்றி பயன்படுத்த வேண்டியது ஊடகங்களின் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com