2020ல் தொற்றா நோயை 5 சதவீதமாக குறைப்பதே அரசின் எதிர்கால திட்டம்

0
74

2020ல் தொற்றா நோயை 5 சதவீதமாக குறைப்பதே அரசின் எதிர்கால திட்டம்: அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன

தொற்றா நோயை 2020ஆம் ஆண்டளவில் ஐந்து சதவீதமாக குறைப்பதே எதிர்காலதிட்டமாகும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இலங்கையைப் போன்றே உலக நாடுகளிலும் தொற்றா நோயாளர்கள் இருக்கின்றனர். இந்த நோய் தொடர்பில் பெரும் சவால் எதிர்நோக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவோரில் 70 சதவீதமானோர் தொற்றா நோயால் பாதிக்கப்பட்டவர்களாவர்.

தொற்றா நோயை

இதற்கு முக்கிய காரணம் புகைத்தல், போதைப்பொருள் பாவனை, உப்பு, சீனி, மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை பெருமளவில் உணவில் சேர்த்துக் கொள்வதே இதற்கான காரணமாகும் என்று குறிப்பிட்டார்.

புகைத்தலை கட்டுப்படுத்துவதற்காக புகையிலை தயாரிப்புக்களை மேற்கொள்ளும் நிறுவனங்களிடமிருந்து 90 சதவீதமான வரியை அறிவிட அரசு தீர்மானித்துள்ளது.
புகைத்தல் மற்றும் மதுபாவனை காணரமாக நாட்டில் வருடமொன்றுக்கு 35 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 5சதவீதமானோர் சிறுவர்களாவர் என்று அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சில்லறையாக சிகரெட்டுக்களை விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்கான ஆவணம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கபடவுள்ளதாகவும் இது அங்கீகரிக்கப்பட்ட பின்னர் பக்கெற்றுகளாகவே சிகரெட் விற்பனை செய்ய முடியும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எதிர்காலத்தில் குடும்ப வைத்தியர் முறை நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, ஒரு வைத்தியரின் கீழ் 5000 பேர் பதிவு செய்யப்பட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
சீனி பாவனையை கட்டுப்படுத்துவதற்காக வர்ண அடையாள முறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இனிப்பு பண்டங்களின் தயாரிப்புக்கு இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 10 சதவீதத்திற்கும் குறைவான பானங்களின் தயாரிப்புக்கு பல்லின நிறுவனங்கள் விரும்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement