20 ஆவது திருத்தம் தொடர்பில் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு ரெலோ தலைவர் கோரிக்கை

0
19

20 ஆவது திருத்தம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கோரவுள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் மாறுபட்ட நிலைப்பாடு காணப்படுகின்றமை தொடர்பில் செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்டபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 20 ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டமைப்பு நிலைப்பாடு மேற்கொள்வதற்கு கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுவது அவசியம் என்பதால் கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கோரவுள்ளேன் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com