Want create site? Find Free WordPress Themes and plugins.

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘எந்திரன்’ படம் ரோபோக்களைப் பற்றிய படம்.

அதாவது எந்திர மனிதன் என அழைக்கப்படும் ரோபோ கதாபாத்திரம் தான் படத்தின் கதாநாயகன். அந்த ரோபோவாகவே ரஜினிகாந்த் நடித்தார். அதிலும் கிளைமாக்சுக்கு முன்னதாக பல ரோபோக்களாகவும் வந்து படம் பார்த்த ரசிகர்களை அசத்தினார்.

அந்த ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் ‘2.0’ படத்தில் 3 முக்கிய ரோபோ கதாபாத்திரங்கள் இடம் பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் ‘2.0’ படத்தின் இரண்டு புகைப்படங்கள் ‘லீக்’ ஆகின.

amy jackson

அதில் ரோபோ உடையில் ரஜினிகாந்தும், எமி ஜாக்சனும் இருந்தனர். முன்பு டில்லியில் படப்பிடிப்பு நடந்த போது படத்தின் வில்லன் அக்ஷய் குமாரும் ரோபோ தோற்றத்தில் இருந்த புகைப்படம் ‘லீக்’ ஆனது.

ரோபோக்களா

அதனால் படத்தில் நாயகன், நாயகி, வில்லன் என மூவருமே ரோபோக்கள்தான், அவர்களுக்குள் நடக்கும் போட்டிதான் ‘2.0’ படத்தின் கதை என சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments