2 நாள் கால்ஷீட்… 5 கோடி சம்பளம்… டிடிஎச் விளம்பரத்தில் நயன்தாரா!

0
217

ஒரு தனியார் டிடிஎச் விளம்பரத்தில் நடிக்க ரூ 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம் நயன் தாரா. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார் நயன்.

இத்தனைக்கும் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த டோரா படம் தோல்வியடைந்தது. ஆனாலும் கூட நயன் தனது சம்பளத்தை ரூ 4 கோடியாக்கி விட்டார் என்கிறார்கள்.

2 நாள் கால்ஷீட்

ரூ 4 கோடி என்பது படத்துக்குதான்… ஒரு டிடிஎச் விளம்பரத்தில் நடிக்க சமீபத்தில் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம். இந்த விளம்பரத்துக்கு நயன் கொடுத்திருக்கும் கால்ஷீட் இரண்டே நாட்கள்தான்…

ஹீரோக்களே இந்த சம்பள விஷயத்தை கேள்விப்பட்டு வாய் பிளக்கிறார்கள். இத்தனை நாள் சேர்த்து வைத்திருக்கும் பாப்புலாரிட்டிதானே மூலதனம்!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com