#Ban vs Nz -T20 தொடரையும் வெற்றி கொண்டது நியூசிலாந்து

0
52

#Ban vs Nz -T20 தொடரையும் வெற்றி கொண்டது நியூசிலாந்து .

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி ஒருநாள் போட்டியை முற்றுமுழுதாக இழந்தது. இதனை தொடர்ந்து இருபது இருபது போட்டியில் விளையாடி வரும் நிலையில் முதலாவது போட்டியில் தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது .இந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் பங்களாதேஷின் சோகம் தொடர்ந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கேன் வில்லியம்சன் தலைமையிலான நியுசிலாந்து அணி, கொலின் முன்றேயின் அதிரடி சதத்தின் துணையுடன் 195 என்ற இமாலய இலக்கை எட்டியது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் மோசமாகவே காணப்பட்டது. யாரும் சொல்லும்படியாக பிரகாசிக்கவில்லை சபீர் ரகுமான் ஓரளவு சிறப்பாக துடுப்பெடுத்தாடி மூன்று சிக்சர்கள் மூன்று பவுண்டரிகள் துணையுடன் 48 ஓட்டங்களை  பெற்றார்.ஆயினும் அணியால் வெற்றிபெற முடியவில்லை.

நியூசிலாந்துக்கு சுற்று்பயணம் மேற்கொண்டிருக்கும் பங்களாதேஸ் அணி இதுவரை ஒரு வெற்றியையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . .