170 பயணிகளுடன் ஏரியில் முழ்கிய படகு – 9 பேர் பலி, 31 பேர் மாயம் (Video)

0
52
கொலம்பியா நாட்டின் வடமேற்கு பகுதியில் 170 சுற்றுலா பயணிகளை ஏற்றியபடி படகு ஒன்று பீநோல் ஏரியில் சென்றுக்கொண்டிருந்தது. ஏரியின் மத்திய பகுதிக்கு சென்ற போது திடீரென படகு நீரில் முழ்க தொடங்கியது.
இதனால் படகிலிருந்த அனைவரும் செய்வதறியாமல் கூச்சலிட்டனர். இதனைக்கேட்ட கரைப்பகுதியிலிருந்த இளைஞர்கள் படகில் இருப்பவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஆனால் படகிலிருந்த மக்கள் அங்கும் இங்குமாக ஓடியதில் படகு அழுத்தம் காரணமாக முற்றிலுமாக முழ்கியது. முதற்கட்ட தகவலின்படி இந்த படகு விபத்தில் 3பேர் பலியானதாகவும், 30பேரின் நிலை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணிகளில் படகுகள் மட்டுமல்லாமல் மூன்று ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக படகு மூழ்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Advertisement