இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது

0
54

இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கடற்படையிரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவின் தெற்கு மற்றும் வெற்றிலைக்கேனி கிழக்கு கடற்பகுதியில் நேற்று மீன் பிடித்துக்கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்;பட்டுள்ளனர்.

கடற்படையினர் இவர்களது 02 இழுவைப் படகுகளையும் கைப்பற்றினர். இவர்கள் யாழ்ப்பாண கடற்றொழில் பணிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.