100 சதங்கள் அடித்து சங்ககாரா சாதனை

0
38
Want create site? Find Free WordPress Themes and plugins.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்ககாரா கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், தலைசிறந்த பேட்ஸ்மேனுமாக திகழ்ந்தவர் குமார் சங்ககாரா. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

சுர்ரே அணிக்காக விளையாடி வரும் சங்ககாரா, நேற்று யார்க்ஷைர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். இதில் 121 பந்துகளை சந்தித்து சதம் அடித்தார். இந்த சதம் மூலம் ஒருநாள் போட்டிகளில் (சர்வதேசம் சதங்கள் உள்பட) 39 சதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகள் உள்பட முதல்தர போட்டிகளில் 61 சதங்கள் அடித்துள்ளார். இதன்மூலம் தனது கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

100 சதங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து சதங்கள் அடித்து சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments