ஹுசேனுக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் முறையிட ஜெனிவா பறக்கும் சரத் வீரசேகர

0
39

ஹுசேனுக்கு எதிராக மனித உரிமைகள் பேரவைத் தலைவரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்யவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியில் உள்ள சரத் வீரசேகர, தற்போது நடந்து வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 35ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாளை ஜெனிவா செல்லவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது இலங்கைக்கு ஆதரவான பரப்புரையில் ஈடுபடவுள்ளதாகவும், இறைமையுள்ள ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு எதிராக, முறைப்பாடு ஒனறை செய்யவுள்ளதாகவும், றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com